நவம்பர் 1ஆம் தேதி முதல் ரூ 50 கோடிக்கும் அதிகமான வருவாய் கொண்ட நிறுவனங்களுக்கு டிஜிட்டல் வழி பண பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கணினி வழங்குநர்கள் கட்டணம், வணிக தள்ளுபடி வீதத்தை விதிக்க மாட்டார்கள் என்று அரசாங்கம் நேற்று தெரிவித்துள்ளது.
பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 50 கோடிக்கும் அதிகமான வருவாய் கொண்ட வணிக நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டண டிஜிட்டல் முறைகளை வழங்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகள் பரிவர்த்தனை செலவை ஆராயவேண்டும் என்றும் கூறினார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, வருமான வரிச் சட்டம் மற்றும் தீர்வு முறைகள் சட்டம் 2007 இல் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.(Payment and Settlement Systems Act 2007).