தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பட்ஜெட் 2022 எதிரொலி: 59 ஆயிரம் புள்ளிகளை கடந்த சென்செக்ஸ்

2022-23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து இன்றும் பங்கு சந்தை எழுச்சி கண்டுள்ளது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

By

Published : Feb 2, 2022, 5:13 PM IST

டெல்லி: 2022-23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று(பிப்.1) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன் எதிரொலியாக நேற்று காலை முதலே இந்தியப் பங்குச் சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகின.

அந்த வகையில் நேற்று காலை நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 582.85 புள்ளிகள் அதிகரித்து 58,597.02 எனவும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 156.20 புள்ளிகள் உயர்ந்து 17,496.05 எனவும் வர்த்தகமாகின.

அதைத்தொடர்ந்து இன்று பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 695.76 புள்ளிகள் அதிகரித்து 59,558.33ஆக வர்த்தகமாகின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 203.15 புள்ளிகள் அதிகரித்து 17,780.00 புள்ளிகளாக வர்த்தகமாகின.

நேற்றைய பட்ஜெட்டில்2022-23 ஆம் ஆண்டு தொடங்கி 2025ஆம் ஆண்டுக்குள் கிராமப்புறத்திற்கும் ஆப்டிக்கல் பைபர் திட்டம், அனைத்து கிராமங்களும் இ-சேவை திட்டத்தின் கீழ் இணைக்கப்படும், நில ஆவணங்களை மின்னணு முறையில் ஆவணப்படுத்த நடவடிக்கை, மின்சார வாகனங்களில் பேட்டரியை சார்ஜ் போட்டுக்கொள்வதற்கு பதிலாக பேட்டரியை மாற்றிக் கொள்ளும் திட்டம், வேளாண் பொருள்களுக்கு குறைந்தப்பட்ச ஆதார விலைக்காக ரூ.2.7 லட்சம் கோடி ஒதுக்கீடு, நடப்பாண்டில் 5ஜி ஏலம் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பெண்ணாறு- காவிரி இணைப்பு உள்ளிட்ட பட்ஜெட்டின் முழு விவரம்- உள்ளே!

ABOUT THE AUTHOR

...view details