கரோனா வைரஸ் பாதிப்பால் உலகின் பெரும்பாலான நாடுகளின் இயல்புநிலை முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதன் விளைவாக உலகில் பொருளாதார சரிவு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
இந்நிலையில் சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனமான மூடீஸ், கரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் கடுமையான சரிவைச் சந்திக்கும் என எச்சரித்துள்ளது. 2020ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 5.3 விழுக்காடிலிருந்து 2.5 விழுக்காடாக குறையும் என மூடீஸ் கணித்துள்ளது.
ஏற்கனவே இந்தியாவின் வங்கித் துறை சிக்கல், சந்தை பணப்புழக்கம் கடும் சரிவை சந்தித்துவரும் நிலையில் தற்போது, கரோனா வைரஸின் தாக்கமும் இந்திய சந்தையை வெகுவாக பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.