தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பட்ஜெட் 2021-22: பொருளாதார வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளும் பிரதமர் - நிதி ஆயோக் சி.இ.ஓ. அமிதாப் கந்த்

வரும் ஒன்றாம் தேதி பட்ஜெட் தாக்கல்செய்யப்படவுள்ள நிலையில் பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.

Modi
Modi

By

Published : Jan 6, 2021, 3:09 PM IST

மத்திய நிதிநிலை அறிக்கை வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல்செய்யப்படவுள்ளது. கோவிட்-19 தாக்கத்தால் நாட்டின் பொருளாதாரம் வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில், வரும் பட்ஜெட் மீது எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது.

பட்ஜெட் தாக்கலுக்கு ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில், நாட்டின் முன்னணி பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். நிதி ஆயோக் காணொலி மூலம் இந்தக் கூட்டத்தை நடத்தவுள்ளதாகவும், இதில் நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார், நிதி ஆயோக் சி.இ.ஓ. அமிதாப் காந்த் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.

முன்னதாக கோவிட்-19 லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் நெகட்டிவ் புள்ளிகளில் மைனஸ் 20 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. பின்னர், விழாக் கால வர்த்தகம் காரணமாக நவம்பர் மாதக் காலாண்டில் மெல்ல மீட்சி கண்டது.

பட்ஜெட்டுக்கு முன்னதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் பல்வேறு துறை சார் வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நாட்டின் எரிவாயு தேவையை நிறைவேற்ற பன்முகத் திட்டங்கள்: பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details