மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வெள்ளிக்கிழமை 2019-20ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அன்றைய தினம் பங்குச்சந்தைகள் சரிவுடனே நிறைவடைந்தன. கடந்த வெள்ளிக்கிழமை மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 394 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 136 புள்ளிகள் சரிந்தன.
கடும் சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை..! - nirmala sitharaman
டெல்லி: ரிசர்வ் வங்கி நிர்வாகிகளுடன் பட்ஜெட் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தவுள்ள நிலையில், பங்குச்சந்தை கடும் சரிவுடன் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், பட்ஜெட் அம்சங்கள் குறித்து ரிசர்வ் வங்கி நிர்வாகிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளார். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நாட்டின் நிதி பற்றக்குறையை சமாளிப்பது குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ள சூழலில் இரண்டு நாள் (சனி, ஞாயிறு) விடுமுறை நாட்களுக்குப்பின், பங்குச்சந்தை மீண்டும் கடும் சரிவுடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 430 புள்ளிகள் சரிந்தும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 130 புள்ளிகள் சரிந்தும் வர்த்தகம் ஆகி வருகின்றன.