டெல்லி: ஊரடங்கினால் இந்திய பொருளாதாரம் சரிவை சந்தித்து வருவதாகவும், தற்போது நிலவும் நிதி பற்றாக்குறையை கையாள சில யுக்திகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் முன்னாள் நிதித் துறைச் செயலாளர் சுபாஷ் சந்திரா கார்க் தனது ப்ளாக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அது தொடர்பான பதிவில், "பண வழங்கல் செயல்பாடுகளின் ஈடுபடும் தனிநபர்கள், தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் அதல பாதாளத்தில் இருக்கிறது. போக்குவரத்து, பொழுதுபோக்கு, விளையாட்டு போன்ற எந்த துறைகளிலும் பணப்புழக்கங்கள் இல்லை.
லாக் டவுனால் 4 கோடி தொழிலாளர்கள் பாதிப்பு - உலக வங்கி
15 விழுக்காடு அளவுக்கு, அதாவது ரூ.15 லட்சம் கோடி அளவில் இந்த துறைகள் மூலம் பண பலன் முடங்கிக் கிடக்கிறது. இந்த வணிக முடக்கத்தினால் நாடு பெருமளவு நிதிப் பற்றாக்குறையை சந்திக்க இருக்கிறது.