டெல்லி: ஒடிசா மாநிலத்தில் முதல் பட்டு நூல் உற்பத்தி மையத்தை காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் தொடங்கியுள்ளது.
ஒடிசா அதன் நேர்த்தியான பட்டுக்கு பெயர் பெற்றது. குறிப்பாக துசார் வகை இங்கு மிகவும் பிரபலம். ஆனால், பட்டு நெசவாளர்கள் தங்களுக்கு தேவையான பட்டு நூலை மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்துதான் இறக்குமதி செய்தனர்.
இதனால் பட்டு துணிகளின் விலை மிக அதிகமாக இருந்தது. ஒடிசாவின் மொத்த காதி துணி உற்பத்தியில் பட்டு கிட்டத்தட்ட 75% விழுக்காடு உள்ளடங்கியிருப்பதால், விலை பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே பட்டு நூல் உற்பத்தி மையத்தை கட்டக் மாவட்டத்தில் தொடங்க காதி முடிவு செய்தது.
இதற்காக 75 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில் இன்று அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, பட்டு நூல் உற்பத்தி ஆலை தொடங்கப்பட்டது.
இந்த ஆலையின் மூலம், ஆண்டுக்கு மொத்தம் 200 கிலோ வரை பட்டு நூலை உற்பத்தி செய்ய முடியும். இதன்மூலம் ஆண்டுக்கு மொத்த வருவாயாக ரூ.94 லட்சம் கிடைக்கும். உள்மாநிலத்திலும் பட்டு துணிகளின் விலை கணிசமாகக் குறையும்.
இந்த பட்டு நூல் உற்பத்தி மையம், 34 பெண்கள் உள்பட 50 கைவினை கலைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை உருவாக்குகிறது. மேலும், 300 பழங்குடி விவசாயிகளுக்கு கூலிகளுக்கு மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளது.
இதையும் படிங்க:ஷாக் கொடுத்த சீனா - மெய்நிகர் பண வர்த்தகத்திற்கு தடை