தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 2, 2021, 12:22 PM IST

ETV Bharat / business

உற்பத்தித் துறையில் ஏற்றம் - நம்பிக்கை அளிக்கும் பொருளாதாரம்

நாட்டின் உற்பத்தித் துறை ஜூலை மாதத்தில் சிறப்பான உயர்வு கண்டுள்ளதால், பொருளாதார வளர்ச்சிக் குறியீடுகள் ஏற்றம்கண்டுள்ளன.

உற்பத்தித்துறை
உற்பத்தித்துறை

நாட்டின் உற்பத்தித் துறை செயல்பாடுகள் குறித்து புள்ளிவிவரங்களை ஐ.ஹெச்.எஸ். (Information Handling Service - IHS) அமைப்பு வெளியிட்டுள்ளது. அந்தப் புள்ளிவிவரத்தின்படி ஜூலை மாதத்தில் நாட்டின் உற்பத்தித் துறை நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

ஐ.ஹெச்.எஸ். புள்ளிவிவரப்படி, பர்சேசிங் மேனேஜர்ஸ் இண்டெக்ஸ் எனப்படும் (PMI) உற்பத்தி குறியீடு ஜூன் மாதத்தில் 48.1 ஆக இருந்தது. இது ஜூலை மாதத்தில் 55.3 ஆக அதிகரித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவு சிறப்பான உயர்வு இதுவாகும்.

இது குறித்து அமைப்பின் பொருளாதார வல்லுநர் போலியன்னா டி லிமா கூறுகையில், "PMI குறியீடு 50-க்கு குறைவாக இருந்தால் பொருளாதாரம் சுருக்கம் அடைகிறது எனப் பொருள்.

ஜூலை மாதத்தில் இந்தக் குறியீடு 50 புள்ளிகளைத் தாண்டியுள்ளது. இதன்மூலம் பொருளாதாரம் முன்னேற்றத்தை நோக்கிச் செல்வதாகத் தெரிகிறது.

ஒருபுறம் விலைவாசி உயர்வு தென்பட்டாலும், உற்பத்தி சார் நடவடிக்கை நம்பிக்கை அளிப்பதால் பொருளாதாரம் முன்னேற்றம் காணும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது" என்றார்.

இதையும் படிங்க:ஆகஸ்ட் 1, உங்கள் பர்ஸை பதம் பார்க்கும்!

ABOUT THE AUTHOR

...view details