தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

கோவிட் - 19: காப்பீடு தொடர்பாக ஐ.ஆர்.டி.ஏ.ஐ. முக்கிய அறிவிப்பு - கோவிட் 19 காப்பீட்டு வழிமுறை

டெல்லி: கோவிட் - 19 காப்பீடு விதிகள் தற்காலிக மருத்துவமனைகளுக்கும் பொருந்தும் என இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

IRDAI
IRDAI

By

Published : Jul 17, 2020, 7:37 PM IST

கோவிட் - 19 பாதித்தவர்களுக்கான காப்பீட்டு வழிமுறைகளில் முக்கிய மாற்றத்தை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொண்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்துவருவதால் நோய்த்தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்கும் விதமாக தற்காலிக மருத்துவமனைகள் பல நிறுவப்பட்டுள்ளன.

மேற்கண்ட தற்காலிக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு கோவிட் 19 காப்பீடு அளிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட நிரந்தர மருத்துவமனைகளில் மட்டுமே, இந்தக் காப்பீட்டு நடைமுறை உள்ளதால் அதில் மாற்றம் கொண்டுவர வேண்டி கோரிக்கை எழுப்பப்பட்டது.

இதையடுத்து, மத்திய மாநில அரசுகளின் அங்கீகாரத்தில் இயங்கும் நாடு முழுவதும் உள்ள தற்காலிக கோவிட் - 19 மருத்துவமனை, சிகிச்சை மையங்களில் கோவிட் - 19 காப்பீட்டுக்கு அனுமதி உண்டு, காப்பீட்டு நிறுவனங்களும் பாதித்தவர்களுக்கு உரியதொகையை உடனடியாக தரவேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

இது மருத்துவக் காப்பீடு, பொதுக்காப்பீடு, மூன்றாவது நபர் காப்பீடு என அனைத்திற்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இரண்டு இருக்கைகளை முன்பதிவு செய்யும் வசதி இண்டிகோவில் அறிமுகம்

ABOUT THE AUTHOR

...view details