இந்தியாவின் இளம் உழைக்கும் வயதுடையவர்கள், குறிப்பாக 30 வயதிற்குட்பட்டவர்கள், தற்போது கரோனா பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள வேலையிழப்புகளால் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக சென்டர் ஃபார் மானிட்டரிங் இந்தியின் எகானமிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை ஏற்பட்ட வேலையிழப்புகளில், 20 வயது முதல் 29 வயது வரையிலான இளைஞர்கள்தான் 81 விழுக்காடு வரை வேலையிழந்துள்ளதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
”20-24 வயதுடையவர்கள் நாட்டிலுள்ள மொத்த வேலைவாய்ப்புகளில் ஒன்பது விழுக்காடு வரை உள்ளனர். ஆனால், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வேலையிழப்புகளில் 35 விழுக்காடு வரை வேலையிழந்தவர்கள் இவர்கள்தான்” என்று சென்டர் ஃபார் மானிட்டரிங் இந்தியின் எகானமிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் இயக்குநர் மகேஷ் வியாஸ் கூறுகையில், "கரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் தொடக்கத்தில் அனைத்து வயதுடையவர்களும் வேலையிழந்தனர். ஆனால், அடுத்தடுத்த மாதங்களில் வயது வரம்புகளின்றி சீரற்ற முறையில் வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதால் இத்தகைய நிலைமை ஏற்பட்டுள்ளது,
மே மாதத்தில் வேலைவாய்ப்புச் சந்தையில் ஒரு சிறிய, ஆனால் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டது. கிட்டத்தட்ட அனைத்து வயதுடையவர்களும் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர், 25-29 வயதுடையவர்களைத் தவிர!