தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

Economic Survey 2021-22: நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.5 விழுக்காடு ஆக உயரும்! - பொருளாதார ஆய்வறிக்கை

நாட்டின் பொருளாதாரம் 8 முதல் 8.5 விழுக்காடு வரை அடுத்தாண்டு உயரும் என பொருளாதார ஆய்வறிக்கை 2021-22 இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

GDP
GDP

By

Published : Jan 31, 2022, 3:41 PM IST

டெல்லி : நாட்டின் வரவு செலவு திட்ட நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) நாளை (பிப்.1) தாக்கல் செய்யப்படும் நிலையில், 2021-22ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று (ஜன.31) தாக்கல் செய்தார்.

இந்த பொருளாதார ஆய்வறிக்கை குறித்து நாட்டின் முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் கூறுகையில், “நடப்பு நிதியாண்டின் (ஏப்ரல்-மார்ச் 2022 காலகட்டம்) வளர்ச்சி விகிதம் கடந்த நிதியாண்டில் 7.3% சுருக்கத்தைக் கண்ட பிறகு 9.2% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்வரும் ஆண்டு, பொருளாதாரத்தின் மறுமலர்ச்சிக்கு ஆதரவை வழங்குவதற்கான நிதி அமைப்பு நல்ல நிலையில் உள்ள தனியார் துறை முதலீட்டில் ஈடுபட தயாராக உள்ளன” என்றார்.

மேலும், இந்த ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையில் தொற்றுநோய் தொடர்பான பொருளாதாரச் சீர்குலைவுகள் இனி ஏற்படாது, பருவமழை சாதாரணமாக இருக்கும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் இந்தத் திட்டம் அமைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், அடுத்த ஆண்டு 8 முதல் 8.5 விழுக்காடு ஜிடிபி வளர்ச்சி கணிப்புக்கு வருவதற்கு, முக்கிய மத்திய வங்கிகளால் உலகளாவிய பணப்புழக்கத்தை திரும்பப் பெறுவது போன்ற பிற காரணிகளையும் உள்ளடக்கியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் குறித்து பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-23 ஆம் ஆண்டுக்கான உண்மையான ஜிடிபி வளர்ச்சி முறையே 8.7 சதவீதம் மற்றும் 7.5 சதவீதம் என்ற உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் சமீபத்திய கணிப்புகளுக்கு ஏற்ப ஜிடிபி வளர்ச்சி கணிப்பு இருப்பதாக கணக்கெடுப்பு கூறியது.

அரசாங்க அறிக்கையின்படி நாட்டின் பொருளாதாரம் 8 சதவீதம் வளர்ச்சி விகிதத்தை எட்டினால், அது உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இருக்கும், ஏனெனில் சீனா 2022 இல் 4.8% ஆகவும், 2023 இல் 5.2% ஆகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தின்படி, உலகப் பொருளாதாரம் 2022 இல் 4.4% ஆகவும், 2023 இல் 3.8% ஆகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Economic Survey 2021-22: மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்!

ABOUT THE AUTHOR

...view details