இந்திய பொருளாதாரம் நாள்தோறும் சரிந்துகொண்டு இருக்கும் நிலையில், கடந்த ஏப்ரல், ஜூன் மதத்திற்கு பிறகு இந்திய பொருளாதாரம் 5.8 வீழ்ச்சியடைந்துள்ளது. தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால், இந்திய பொருளாதாரம் 5.7 குறைய வாய்ப்புள்ளது என நோரூமா அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்திய பொருளாதாரம் 5.7 விழுக்காடாக குறைய வாய்ப்பு...!
மும்பை: பலவீனமான முதலீடுகளால் நாள்தோறும் குறைந்துவரும் இந்திய பொருளாதாரம், தற்போது 5.7 விழுக்காடாக குறைய வாய்ப்புள்ளதாக, நோரூமா அறிக்கை வெளியிட்டுள்ளது.
Indian economy down
ஏற்கனவே இந்திய பொருளாதாரம் 2018-2019ஆம் ஆண்டில் 6.8 குறைந்தது. 2014-2015ஆம் ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு சரிவை சந்தித்தது இதுவே முதல் முறையாகும். இதையொட்டி இந்திய பொருளாதாரம் அதிகளவிலான மந்த நிலைக்கு செல்ல இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மோசமான நெருக்கடியை ஆட்டோமொபைல் துறை சந்தித்தது. இதனால் பொருளாதாரம் மிக பெரிய வீழ்ச்சியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Last Updated : Aug 21, 2019, 6:27 PM IST