தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 28, 2020, 4:53 AM IST

ETV Bharat / business

அடுத்தாண்டு ஜி.டி.பி. 5%ஆக உயரலாம் - ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் சுப்பாராவ்

மும்பை: நாட்டில் நிலவும் பொருளாதாரப் பாதிப்பு, மாறி ஜி.டி.பி அடுத்தாண்டு 5 விழுக்காடு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சுப்பா ராவ் தெரிவித்துள்ளார்.

Subbarao
Subbarao

கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, நாட்டின் பொருளாதாரத்தில் கடும் பாதிப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறியீடான ஜி.டி.பி 5 விழுக்காடுக்கும் கீழ், சரியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழல் குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் துவுரி சுப்பா ராவ் தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டார். அதில், 'கரோனா பாதிப்பு தாக்கம் மற்ற பேரிடர்களைக் காட்டிலும் வேறுபட்டது.

குறிப்பாக, மற்ற இயற்கைப் பேரிடர்கள் உட்கட்டமைப்பை முழுவதும் அழித்துவிடும். ஆனால், தற்போது இதுபோன்ற பேரிடர் இங்கே இதுவரை நிலவவில்லை. அனைத்து போக்குவரத்து, உட்கட்மைப்பு வசதிகளும் சேதாரம் அடையாமல் நம்மிடம் உள்ளது. எனவே லாக்டவுனுக்குப் பின், நாம் உரிய விதத்தில் செயல்படத் தொடங்கினால் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நல்ல வாய்ப்பு உள்ளது.

இதன் மூலம் அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 விழுக்காடாக மீட்சி அடையும்' என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சுப்பாராவ் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:தங்கம் கொள்முதல் செய்யும் முனைப்பில் 37% பெண்கள்!

ABOUT THE AUTHOR

...view details