டெல்லி:இந்தியா, ஐரோப்பா உடனான தனது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தங்களை, அடுத்த ஐந்து வருட காலத்திற்கு (2020 முதல் 2025 வரை) புதிப்பித்துள்ளது. இதன் முதல் ஒப்பந்தம் 2001ஆம் ஆண்டு நவம்பர் மாதம் போடப்பட்டது. அதை தொடர்ந்து 2007, 2015ஆம் ஆண்டுகளில் இருமுறை ஒப்பந்தம் புதுபிக்கப்பட்டது.
இதன்மூலம் நீர், மாசற்ற போக்குவரத்து, இ-இயக்கம், சுத்தமான எரிசக்தி, சுழற்சி பொருளாதாரம், சுகாதாரம், தகவல் தொழிற்நுட்பம் ஆகியவற்றில் நாடுகள் ஒன்றிணைந்து ஒத்துழைப்போடு செயல்படும்.
காணொலி காட்சி வாயிலாக அரங்கேறிய இந்த இந்தியா - ஐரோப்பா 15ஆவது ஒன்றிய மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மார்ச் மாதத்தில் நடக்கவிருந்த இந்திய-ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டை கோவிட்-19 காரணமாக நாங்கள் ஒத்தி வைக்க வேண்டியிருந்தது. மெய்நிகர் தளத்தின் மூலமாக நாம் இன்று சந்திப்பது நல்ல விஷயம்.
ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிகள் என்னென்ன?
முதலாவதாக, கரோனா தொற்றால் ஐரோப்பாவில் ஏற்பட்ட இழப்புக்கு எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களைப் போலவே, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையேயான உறவுகளை ஆழப்படுத்தவும், வலுப்படுத்தவும் நானும் உறுதி பூண்டுள்ளேன். இதற்காக நாம் நீண்டகால மூலோபாயத் திட்டத்தை பின்பற்ற வேண்டும்.
இதைத் தவிர, குறிப்பிட்டக் காலக்கெடுவுக்குள் செயல்படுத்தக்கூடிய செயல்திறன்மிக்க திட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் இயற்கையான பங்குதாரர்கள். உலகத்தின் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கும் நமது கூட்டுறவு பயன்படும். இந்த உண்மை இன்றைய உலக நிலைமையில் இன்னும் தெளிவாகப் புலப்பட்டுள்ளது.
ஜனநாயகம், பன்முகத்தன்மை, பலதரப்புத்தன்மை, சுதந்திரம் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகிய உலகளாவிய நல்ல காரியங்களை இரு தரப்பும் பகிர்ந்துகொள்கின்றன. கோவிட்-19க்குப் பிறகு, பொருளாதார களத்தில் உலகளாவிய புதிய பிரச்னைகள் எழுந்துள்ளன. இதை எதிர்கொள்ள ஜனநாயக நாடுகளுக்கிடையே பெரிய அளவில் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.
மக்களின் தனியுரிமை தகவல்களை பாதுகாக்க தனிப்பட்ட ‘தரவு பாதுகாப்புச் சட்டம்’
நமது மக்களின் உடல்நலனும், செல்வமும் இன்று சவால்களை சந்திக்கின்றன. விதிகள்-சார்ந்த சர்வதேச முறையில் பலதரப்பட்ட அழுத்தங்கள் இருக்கின்றன. இத்தகைய சூழ்நிலைகளுக்கிடையே, பொருளாதார மறுகட்டமைப்பிலும், மனிதர்கள் சார்ந்த, மனிதநேயம் சார்ந்த உலகமயமாக்கலைக் கட்டமைப்பதிலும், இந்திய-ஐரோப்பிய ஒன்றியக் கூட்டு குறிப்பிடத்தக்க அளவு பங்காற்றலாம். நடப்பு சவால்களைத் தவிர, பருவநிலை மாற்றம் போன்ற நீண்டகால சவால்களும் இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னுரிமை ஆகும்.
புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் பயன்பாட்டை இந்தியாவில் அதிகரிக்க வைப்பதற்கான எங்கள் முயற்சிகளில், முதலீடு மற்றும் தொழில்நுட்பத்தை ஐரோப்பாவில் இருந்து நாங்கள் வரவேற்கிறோம். இந்த மெய்நிகர் மாநாட்டின் மூலம் நமது உறவுகள் இன்னும் பலப்படும் என நான் நம்புகிறேன்” என்று உரை நிகழ்த்தினார்.