டிசம்பர் மாதத்திற்கான மாதாந்திர அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலவரம் குறித்து கூறியுள்ளது. அதன்படி, கோவிட்-19 பாதிப்பால் முடக்கம் கண்ட இந்திய பொருளாதாரம் மீட்சியின் பாதையில் செல்கிறது.
குறிப்பாக, பல்வேறு கணிப்புகளை பொய்யாக்கும் விதமாக இந்தியவின் வளர்ச்சி வேகமாக வளர்ந்துவருகிறது. கடந்த நவம்பர் மாத்தில் வேளாண்மை மற்றும் தொழில்துறை மூலம் பெற்ற மீட்சி டிசம்பர் மாதத்திலும் தொடர்ந்துவருகிறது. கோவிட்-19 முடக்கம் அறிவிக்கப்பட்ட முதல் காலாண்டில் -23.9 விழுக்காடு என நெகட்டிவ் வளர்ச்சிக்குச் சென்ற இந்திய பொருளாதாரம், அடுத்தக் காலாண்டில் மீண்டு -7.5 விழுக்காடாக ஏற்றம் கண்டது.