தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பொருளாதாரத்தில் இந்தியாவுக்குப் பின்னடைவு; பிரிட்டன், பிரான்ஸ் முன்னேற்றம்! - பிரிட்டன்

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் 5ஆவது இடத்திலிருந்த இந்தியாவை பின்னுக்குத் தள்ளி பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் முன்னேறியுள்ளன.

Growth

By

Published : Aug 1, 2019, 9:58 PM IST

உலக வங்கி ஆண்டுதோறும் உலகின் முன்னணி பொருளாதார நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. கடந்தாண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் உலகளவில் இந்தியா ஐந்தாவது இடத்திலிருந்தது. முதல் இடத்தில் அமெரிக்கா, இரண்டாவது இடத்தில் சீனா, மூன்றாவது இடத்தில் ஜப்பான், நான்காவது இடத்தில் ஜெர்மனி ஆகிய நாடுகள் இருந்தன.

இந்நிலையில், 2018ஆம் ஆண்டுக்கான புள்ளி விவரத்தை உலக வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், கடந்தாண்டு ஆறாவது, ஏழாவது இடத்திலிருந்த பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் இந்தியாவை பின்னுக்குத்தள்ளி முறையே ஐந்தாவது, ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தியா தற்போது ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவின் பொருளாதாரம் தற்போது 2.73 லட்சம் கோடி டாலராக உள்ளது. இந்தியாவுக்கு முந்தைய இடத்தில் உள்ள பிரான்ஸின் பொருளாதாரம் 2.78 லட்சம் கோடி டாலராக உள்ளது. முதலிடத்தைப் பிடித்துள்ள அமெரிக்கா, இந்தியாவை விட சுமார் எட்டு மடங்கு அதிகமாக 18.17 லட்சம் கோடி டாலர் பொருளாதார சக்தியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details