தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

'இந்தியப் பொருளாதாரம் சோதனையில் உள்ளது' - நிர்மலா சீதாராமன் ஒப்புதல் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதாரம் சிக்கல்

டெல்லி: இந்திய மற்றும் உலகப் பொருளாதாரம் சோதனை காலத்தில் உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Nirmala sitharaman

By

Published : Nov 11, 2019, 5:19 PM IST

உலக நிதிநிலைமை தொடர்பான புத்தக வெளியீட்டு விழா மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர், இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை குறித்து உரையாற்றினார்.

அவர், உலகில் நிலவி வரும் பொருளாதார சிக்கல் குறித்து இந்த புத்தகம் விரிவான பார்வை அளிக்கிறது எனவும், இந்த சிக்கல்களிலிருந்து மீண்டு வருவதற்கான வழிகளை விரிவாக அளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், இந்தியப் பொருளாதாரம் தற்போது சோதனை காலத்தில் உள்ளது எனவும், எனினும் தொடர் நடவடிக்கைகள் மூலம் இந்த சிக்கல்களிலிருந்து மீண்டு வருவோம் எனவும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் கடந்த ஆறாண்டுகளில் இல்லாதளவிற்கு 5 சதவிகிதமாக சரிந்துள்ளது. குறிப்பாக நுகர்வு மற்றும் தனியார் முதலீடு பெரும் சுணக்கத்தில் உள்ளதால் பொருளாதார மந்தநிலை நீடித்துவருகிறது.

பொருளாதார மந்தநிலை தொடர்பாக நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக மறுத்துவந்த நிலையில், தற்போது முதல்முறையாக பொருளாதாரம் சோதனை கட்டத்தில் உள்ளது என ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: அரசுக்கு கோரிக்கை விடுக்கும் சேலத்து சிங்கப்பெண்!

ABOUT THE AUTHOR

...view details