டெல்லி:இரு நாடுகளுக்கிடையேயான இந்த இருதரப்பு வர்த்தகம் முந்தைய ஆண்டு 78 பில்லியன் டாலராக இருந்தது.
இருதரப்பு வர்த்தகத்தை 500 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எளிமைப்படுத்துவதற்காக இரு நாடுகளும் பரஸ்பரம் உறுதியளித்துள்ளன.
"இந்திய-அமெரிக்க பொருள்கள் வர்த்தகம் புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்த வர்த்தகம் 2020ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டில் 45 விழுக்காடு அளவுக்கு அதிகரித்துள்ளது.
அதன்படி, 113 பில்லியன் அமெரிக்க டாலர் என அடைந்து இருதரப்புக்கு இடையேயான இந்த வர்த்தகம் வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளது" என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உலகச் சந்தைகளை உலுக்கி எடுத்த அமெரிக்க பணவீக்கம்