உலகளாவிய பசி குறியீட்டுப் பட்டியலில் (Global Hunger Index) வறுமை அடிப்படையில் இந்தியா 102ஆவது இடம் வகிக்கிறது. உலகில் வாழும் ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் வாழ்கின்ற நிலையில், தெற்காசிய நாடுகளில் அதிக பசி, வறுமையால் வாடுவதில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
வறுமை நிலையில், பாகிஸ்தான், நேபால், இலங்கை போன்ற அண்டை நாடுகளை விட இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து 2010இல் உதயமான பிரிக்ஸ் (BRICS) எனப்படும், ஐந்து வளரும் நாடுகளின் சர்வதேசக் கூட்டமைப்பில் கடந்த சில வருடங்களாக இந்தியா பின் தங்கியுள்ளது என்பது, இந்திய பொருளாதார மந்தநிலையைக் குறிக்கிறது.
ஐந்து வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளில், 20 விழுக்காடு குழந்தைகள் எடை குறைவோடு காணப்படுகிறார்கள் என்றும், 37 விழுக்காடு குழைந்தைகள் போதுமான வளர்ச்சி இல்லாமல் வாழ்கின்றனர் என்றும் உலகளாவிய பசி குறியீட்டுப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது.