தகவல் தொழில்நுட்பம் கோலோச்சியுள்ள இன்றைய உலகில் டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்ச்சியான மாற்றங்களைச் சந்தித்துவருகிறது. இந்தத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் உலக நாடுகளுடன் போட்டிப்போடும் அளவிற்கு இந்தியா தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டிய சூழல் நிலவிவருகிறது.
ஐ.எம்.டி. (IMD) எனப்படும் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனம் 2019ஆம் ஆண்டுக்கான உலக நாடுகளின் டிஜிட்டல் வளர்ச்சித் திறன் குறித்த தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா நான்கு இடங்கள் முன்னேறியுள்ளது. கடந்தாண்டு 48ஆவது இடத்திலிருந்த இந்தியா 44ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.