தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

வாங்கும் திறன் அடிப்படையில் உலகின் 3ஆவது பெரிய நாடான இந்தியா! - வர்த்தகச் செய்திகள்

டெல்லி: வாங்கும் திறன் அடிப்படையில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது.

PPP
PPP

By

Published : Jun 24, 2020, 5:55 PM IST

உலக நாடுகளின் பொருளாதாரத சக்தி குறித்து உலக வங்கி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகின் முன்னணி பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.

அதாவது, வாங்கும் திறன் அதிகம் கொண்ட நாடுகளில் பொருளாதார நாடுகள் பட்டியலில் சீனா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாம் இடத்திலும் உள்ளன. சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

உலகப் பொருளாதரத்தில் 16.4 விழுக்காடு வாங்கும் திறனை சீனா பெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக அமெரிக்கா 16.3 விழுக்காடும், மூன்றாவதாக இந்தியா 6.7 விழுக்காடும் பெற்றுள்ளன. மேலும், உலகில் நுகர்வு அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலிலும், மொத்த மூலதனம் கொண்ட நாடுகளின் பட்டியலிலும் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளதாக உலக வங்கி ஆய்வு தெரிவிக்கிறது. அதேவேளை, மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் ஐந்தாவது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா தற்போது திகழ்கிறது.

இதையும் படிங்க:சீன நிறுவனங்களுக்கு எதிராக அதிகரிக்கும் வெறுப்பு, பயனடையும் சாம்சங் நிறுவனம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details