டெல்லி: கரோனா காலங்களின் போது மருந்துகளும், மருத்துவ உபகரணங்களும் தேவைப்படும் மக்களுக்கு அஞ்சல் சேவை மூலம் 2000 டன் மதிப்பிலான பொருட்களை டெலிவரி செய்துள்ளதாக இந்திய அஞ்சல் துறை தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும், 85 லட்சம் பயனாளர்களிடம் இருந்து 1500 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஆதார் எண் பண பரிவர்த்தனை மூலம் பெறப்பட்டதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
'தற்சார்பு இந்தியா' எனும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை உணர்ந்து கொள்ளும் வகையில் செயல்படுமாறு தகவல் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மே 22ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இந்திய அஞ்சல் துறை தலைமை மற்றும் மூத்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
சொமாட்டோ, ஸ்விக்கி நிறுவனங்களுக்கு போட்டியாக களமிறங்கிய அமேசான்!
இந்திய அஞ்சல் துறை சுமார் 6 லட்சம் உணவு, ரேஷன் பொருட்களை தொழிலாளர்கள், நகராட்சி ஊழியர்களுக்கு சுய பங்களிப்பு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து விநியோகித்தது குறிப்பிடத்தக்கது.