இந்தியா - பெரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தம், முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில், தடையற்ற வர்த்தக உடன்படிக்கை (FTA) தொடர்பாக ஆகஸ்ட் மாதத்தில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளன. தடையற்ற வர்த்தக உடன்படிக்கையில், இரண்டு வர்த்தக பங்காளிகள், வர்த்தகத்தை ஊக்குவிக்கத் தகுந்த நெறிகளையும், புது விதிகளையும் செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து இந்தியா-பெரு பேச்சுவார்த்தை
இந்தியா-பெரு நாடுகளுக்கிடையே தடையற்ற வர்த்தக உடன்பாடு குறித்து, ஐந்தாம் கட்டப் பேச்சுவார்த்தை ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளன.
இந்திய - பெரு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்துப் பேச்சுவார்த்தை!
இந்தியாவிலிருந்து பெரு நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களில் இயந்திர வாகனங்கள், வாகன உதிரிப் பாகங்கள், உருளைப்பட்டைகள் (டயர்), சாயங்கள், இரும்பு - எஃகு, பருத்தி நூல், துணிகள் ஆகியவை பிரதான பொருட்களாக இருக்கின்றன.
பெருவிலிருந்து இந்தியாவுக்கு கனிமங்கள் - தாதுக்கள், தங்கம், உரங்கள், அலுமினியம், காபி, கச்சா எண்ணெய், துத்தநாகம் ஆகியவை இறக்குமதி செய்யப்படுகின்றன.