தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

உலகின் மருந்தகமாக இந்தியா திகழ்கிறது - அமைச்சர் சவுபே பெருமிதம் - world pharmacy is india

இந்தியாவின் பொருளாதாரம் பெருமளவில் வளர்ந்துவருவதாகவும், கரோனா தொற்று காலங்களில் ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தை உலக நாடுகளுக்கு வழங்கி ‘உலக மருந்தகம்’ எனும் அங்கீகாரம் கொண்டு இந்தியா திகழ்வதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே தெரிவித்துள்ளார்.

world pharmacy is india
world pharmacy is india

By

Published : May 30, 2020, 12:57 PM IST

டெல்லி: கரோனா காலங்களில் ஹைட்ரோகுளோரோகுயின் போன்ற மருந்துகளை உலக நாடுகளுக்குக் கொடுத்துஇந்தியா உதவியது பெருமிதத்துக்குரியது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே கூறியுள்ளார்.

உலகளவில் பெரிய மருந்தகமாக இந்தியா திகழ்வதாக, கார்ப்கினி ஒருங்கிணைந்த ‘மருத்துவம் மற்றும் அதனை சார்ந்த தொழில்களின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இணைய வழி கருத்தரங்கத்தில் அமைச்சர் சவுபே தெரிவித்துள்ளார்.

நம் மூளையை எப்போதும் புதுபித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று கூறியவர், அதனை ஒருபோது மழுங்கடிக்க அனுமதிக்கக்கூடாது. இதன்மூலம் மருத்துவத் துறையை அபரிவிதமான வளர்ச்சிப் பார்வைக்கு அழைத்துச் செல்ல முடியும் என்றுள்ளார்.

வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கு பதிலாக தீவனமாக மாற்றலாம் - சுற்றுச்சூழல் ஆய்வாளர் சுல்தான் இஸ்மாயில்

உலகளவில் இந்தியா 60 விழுக்காடு தடுப்பூசி சந்தையை கையகப்படுத்தியுள்ளது. தடுப்பூசிகள் தயாரிக்கும் கால அளவும் 10 வருடத்தில் இருந்து ஒரு வருடமாக குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details