கோவிட்-19 பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பல்வேறு நாடுகளிலும் பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதன்படி கரோனா பாதிப்புகளால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கங்களைக் கணக்கில்கொண்டு சர்வதேச நிதியம் 2020-21ஆம் நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி 2020ஆம் ஆண்டில் சர்வதேச பொருளாதார வளர்ச்சி என்பது 4.9ஆக இருக்கும் என்று சர்வதேச நிதியம் கணித்துள்ளது. இது கடந்த ஏப்ரல் மாதம், சர்வதேச பொருளாதார அவுட்லுக் (WEO) கணித்த பொருளாதார வளர்ச்சியைவிட 1.9 விழுக்காடு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, 2020-21ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி என்பது முன்பு கணிக்கப்பட்டதைவிட 4.5 விழுக்காடு வீழ்ச்சியை சந்திக்கும் என்று சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சர்வதேச நிதியத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத், "கோவிட்-19 தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்பது முன்பு கணித்தைவிட மிக மோசமாக உள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
வரலாற்றிலேயே முதல்முறையாக அனைத்து பிராந்தியங்களின் வளர்ச்சியும் நெகட்டிவ்-இல் இருக்கும். முதல் காலாண்டில் சீன பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. ஆனால், தற்போது விரைவாக அந்நாட்டு பொருளாதாரம் மீண்டுவருகிறது. 2020ஆம் நிதியாண்டில் சீனாவின் வளர்ச்சி 1.0ஆக இருக்கும்.