தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

இந்தியாவின் வளர்ச்சி தீவிர தேய்மானத்தை சந்தித்து வருகிறது - ஐ.எம்.எப் நிறுவனம் - Economic growth of India is weaker says IMF

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட மோசமான சரிவை சந்தித்து வருவதாக சர்வதேச நிதி முனையம் ஐ.எம்.எப் எச்சரிக்கை விடுத்துள்ளது.

IMF

By

Published : Sep 14, 2019, 1:50 PM IST

Updated : Sep 14, 2019, 4:01 PM IST

நாடு கடுமையான பொருளாதார சரிவை தற்போது சந்தித்துவரும் நிலையில் சர்வதேச நிதி அமைப்பான ஐ.எம்.எப் இந்தியாவுக்கு கவலைத் தரும் செய்தி ஒன்றைத் தந்துள்ளது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச நிதி முனையம் ஐ.எம்.எப். அமைப்பின் கூட்டம் நேற்று நடைபெற்றது.

அதன் பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய ஐ.எம்.எப் செய்தி தொடர்பாளர் கேரி ரைஸ், நாங்கள் எதிர்பார்த்ததைவிட இந்தியாவின் பொருளாதார நிலை பலவீனமாக உள்ளது. வங்கி சாரா அமைப்புகளில் நிலவும் குழப்ப நிலை, அதனால் பணப்புழக்கத்தில் ஏற்பட்டுள்ள பலவீனமான சூழல் ஆகியவை இந்த மந்த நிலைக்கு காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை 0.3 சதவிகிதம் குறைத்து, 2019-20கான ஜி.டி.பி புள்ளிகள் 7.0 சதவிகிதமாக இருக்கும் என கணித்துள்ளது. இந்தியாவின் பொருளாதார சரிவுக்கு நிதியமைச்சகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் மந்தநிலை தொடர்ந்து வருவது கவலைக்குரிய அம்சமாக காணப்படுகிறது.

Last Updated : Sep 14, 2019, 4:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details