தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

மார்ச் 30ஆம் தேதி ஐ.டி.பி.ஐ. வங்கி ஊழியர்கள் நாடுதழுவிய உண்ணாநிலை - போராட்டம்

டெல்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 30ஆம் தேதி ஐ.டி.பி.ஐ. வங்கி ஊழியர்கள் நாடுதழுவிய அளவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

IDBI

By

Published : Mar 26, 2019, 7:59 PM IST

பொதுத்துறை வங்கியான ஐ.டி.பி.ஐ. வாராக்கடன் பிரச்னை உள்ளிட்ட நிதிநெருக்கடி காரணமாகத் தவித்துவருகிறது. சுமார் நான்காயிரத்து 185 கோடி ரூபாய் அளவிற்கு நிதியிழப்பைச் சந்தித்த ஐ.டி.பி.ஐ. வங்கியின் வாராக்கடன் டிசம்பர் மாதம் 29.67 சதவிகிதம் வரை உயர்ந்தது.

இதையடுத்து அந்நிறுவனத்தின் 51 சதவிகித பங்குகளை நிர்வகிக்கும் பொறுப்பு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.க்கு கொடுக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்நடவடிக்கைக்கு ஐ.டி.பி.ஐ. வங்கி ஊழியர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

கோப்புப்படம்

இந்நிலையில், மேற்கொண்ட நடவடிக்கை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திவரும் மார்ச் 30ஆம் தேதி நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளனர். இதற்கான சுற்றறிக்கையை அனைத்திந்திய ஐ.டிபி.ஐ. வங்கி ஊழியர்கள் சம்மேளனம் வெளியிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details