வருமான வரித்துறை சார்பாக மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில், ''வரி செலுத்துவோர் ஜாக்கிரதை. பணத்தைத் திருப்பியளிப்பதாக அனுப்பப்படும் போலியான தொடர்புகளை மக்கள் க்ளிக் செய்து பார்க்க வேண்டாம். அதுபோன்ற எந்தவித தொடர்புகளையும் வருமான வரித்துறை அனுப்பவில்லை'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய தரவுகளின்படி, ஏப்ரல் மாதம் 8ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரையில் வரி செலுத்துவோர், கார்ப்பரேட்டுகள், சிறு - குறு தொழிலாளர்கள் என 14 லட்சம் பேருக்கு ரூ.9 ஆயிரம் கோடி வரை பணம் திருப்பியளிக்கப்பட்டுள்ளது.