தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

சரிவில் சந்தை: எந்தெந்த பங்குகளை வாங்கலாம்? நிபுணரின் கருத்தைக் கேட்கலாம்... - stocks to buy

பங்குச் சந்தை வீழ்ச்சியை சந்திக்கும் நேரத்தில் முதலீட்டாளர்கள் எந்த மாதிரியான பங்குகளை வாங்கலாம், எந்தெந்த துறைகளில் பங்குகளை வாங்கலாம் எவ்வாறு முதலீடு செய்யலாம், சந்தையை எப்படி அணுக வேண்டும் என ஆலோசனை வழங்குகிறார் பங்குச் சந்தை நிபுணர் நாகப்பன்.

shares to buy
shares to buy

By

Published : Mar 12, 2020, 9:39 PM IST

இந்திய பங்குச் சந்தையும், தேசியப் பங்குச் சந்தையும் 12 வருட வரலாற்று வீழ்ச்சிக் குறியீட்டை தாண்டி இன்று இறக்கத்துடன் வர்த்தகமானது. இது பெருவாரியான வைப்பு முதலீட்டாளர்கள் (டெலிவரி முறையில் பங்கு முதலீடு செய்பவர்கள்) மத்தியில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியிருந்தாலும், தின வர்த்தகம் (இன்ட்ராடே) மேற்கொள்பவர்களுக்கு பங்குச் சந்தையின் ஆட்டம் சற்றும் துடிப்பையும், பங்குகளை வாங்கி விற்கும் சூட்டையும் கிளப்பியுள்ளது என்பது வர்த்தக ஜாம்பவான்கள் அறிந்ததே.

எனினும், வைப்பு முதலீட்டாளர்களையே முழுமனதாக நம்பி, பலமான அடித்தளத்துடன் இயங்கும் இந்திய பங்கு வர்த்தகம், தற்போதையச் சூழலில் எவ்வாறு அணுகலாம் என பங்குச் சந்தை நிபுணர் நாகப்பன் முதலீட்டாளர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்குகிறார். அவை என்ன என்பதனை கருத்திற்கொண்டு பங்குச் சந்தையில் முதலீடு செய்வது அவசியம்.

பங்குச் சந்தையின் சரிவைக் குறித்து பேசிய அவர், “இந்த வீழ்ச்சி ஒன்றும் புதிதல்ல. 2008ஆம் ஆண்டு இதுபோன்று ஒரு வீழ்ச்சியைக் கண்டு மீண்டுள்ளது இந்திய பங்குச் சந்தை. மேலும், பல நெருக்கடியான தருணங்களில் பங்குச் சந்தை வீழ்ச்சியைக் கண்டு அதன்பின் மீண்டெழும். ஆனால் இதுபோன்ற தருணத்தில் பங்கு வர்த்தகர்கள் சில நுணுக்கங்களை கையாள வேண்டும்” என்று கூறினார். அதில்,

செய்யக்கூடாதவை

  1. பெருந்தொகையை பங்குகளில் முதலீடு செய்வது
  2. சிறு கட்டமைப்பு கொண்ட நிறுவனங்களில் முதலீடு செய்வது
  3. புதிய நிறுவனங்களை முதலீட்டிற்காக தேர்ந்தெடுப்பது
  4. தற்போதைய நிலைகளில் துறைகளின் விளைவுகள் என்ன என்பதனை அறியாமல் முதலீடு செய்வது

செய்யக்கூடியவை

  1. சிறு சிறு முதலீடுகளை மேற்கொள்வது
  2. நல்ல தர மதிப்பீடு கொண்ட பங்குகளை வாங்குவது
  3. முதலீடு செய்யும் நிறுவனத்தின் நகர்வுகள் நிலையானதா என்பதை கவனிப்பது
  4. தற்போதையச் சூழலைக் கருத்திற்கொண்டு மருத்துவத் துறை, மருந்து காப்பீடு, சுகாதார பராமரிப்புத் துறைகளில் முதலீடு மேற்கொள்வது
  5. ஏற்றம் காணும் பங்குகளில் பகிர்ந்து முதலீடு செய்வது

இவை அனைத்தையும் கவனத்தில் வைத்து முதலீட்டாளர்கள் தங்களின் வர்த்தகத்தை லாபகரமாக மேற்கொள்ளவேண்டும் என்று நாகப்பன் கேட்டுக்கொண்டுள்ளார்.

பங்குச் சந்தை நிபுணர் நாகப்பன் பேட்டி

ABOUT THE AUTHOR

...view details