தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

நாட்டின் வேலைவாய்ப்பு நடவடிக்கையில் முன்னேற்றம் - ஆய்வு தகவல் - வேலைவாய்ப்பு செய்திகள்

டெல்லி: நாட்டின் வேலைவாய்ப்பு தொடர்பான நடவடிக்கையில் 5 விழுக்காடு முன்னேற்றம் கண்டுள்ளதாக நௌக்ரி நிறுவத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

Hiring
Hiring

By

Published : Aug 12, 2020, 7:26 PM IST

நாடு முழுவதும் கரோனா தடுப்பு லாக்டவுன் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அனைத்து துறைகளும் பெரும் முடகத்தைச் சந்தித்தன. இதன் உடனடி விளைவாக வேலையிழப்பு, ஊதியக் குறைப்பு உள்ளிட்டவை அதிகளவில் அரங்கேறிவருகின்றன.

ஏப்ரல், மே, ஜூன் உள்ளிட்ட மாதங்களில் இதன் தாக்கம் மோசமாக இருந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் இதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தனியார் நிறுவன ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

அதன்படி நௌக்ரி என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், சுகாதாரம், எ.எம்.சி.ஜி. உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்பு நடவடிக்கைகள் தற்போது முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. அதேபோல் கட்டுமானம், பொழுதுபோக்கு, ஊடகம் உள்ளிட்ட துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஜூன் மாதத்தை ஒப்பிடும்போது ஜூலை மாதத்தில் வேலைவாய்ப்பு 5 விழுக்காடு உயர்வைச் சந்தித்துள்ளது. அதேவேளை ஹோட்டல், விமானப்போக்குவரத்து, சுற்றுலா, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகள் முடக்கத்திலிருந்து மீளவில்லை என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இதையும் படிங்க:பொருளாதாரம் குறித்து பிரதமர் மோடியை கலாய்த்த ராகுல்

ABOUT THE AUTHOR

...view details