பல்வேறு கணக்கீட்டின் படி ரிசர்வ் வங்கியிடம் ரூ.9 லட்சம் கோடி உபரி நிதி உள்ளது தெரியவந்துள்ளது. சர்வதேச அளவில் மத்திய வங்கிகள் தம்மிடம் உள்ள உபரி நிதியின் ஒரு பகுதியை அந்தந்த நாட்டு அரசுகளுக்கு வழங்கும் நிலைபோல், இந்தியாவிலும் கொண்டு வர வேண்டும் என மத்திய நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் உபரி நிதியில் ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு பற்றி வங்கி சார்ந்த நிர்வாகிகள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.