நவம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.03 லட்சம் கோடியாக உள்ளது. அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.95,380 கோடியாக இருந்தது. தற்போது 6 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்தாண்டு (2018) இதேக்காலகட்டத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.97,637 கோடியாக இருந்தது.
நவம்பரில் ஜிஎஸ்டி வசூல் 1 லட்சம் கோடி.! - நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல்
டெல்லி: மூன்று மாத இடைவெளிக்கு பிறகு நவம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடியை தாண்டியுள்ளது.
நவம்பரில் வசூலான ஜிஎஸ்.டியில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (Central Goods and Services Tax) ரூ.19,592 கோடியும், மாநில அரசு சரக்கு மற்றும் சேவை வரி (State Goods and Services Tax) ரூ.27,144 கோடியும், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (Integrated Goods and Services Tax.) ரூ.49,028 கோடியும் (அதில் ரூ.20,948 கோடி இறக்குமதியால் கிடைத்தது) ஆகும். ரூ.7,727 கோடி வரிகள் மூலம் கிடைத்துள்ளது. இதில் ரூ.869 கோடி இறக்குமதி மூலம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தங்க நகைகளுக்கு ஹால் மார்க் முத்திரை கட்டாயம்: பஸ்வான் தகவல்.!