டெல்லியில் இன்று 33-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபற்றது. நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடந்த இந்தக்கூட்டத்தில், மாநில நிதியமைச்சர்கள் வீடியோ கான்பிரன்சிங் முறையில் கலந்து கொண்டனர். கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், கட்டுமான நிறைவடையாத வீடுகள் மீதான ஜிஎஸ்டி விகிதம், 12 விழுக்காட்டில் இருந்து 5 ஆக குறைக்கப்பட்டது. அதேபோல், மலிவு விலை வீடுகளுக்கான ஜிஎஸ்டி விகிதம் 8 விழுக்காட்டில் இருந்து 1 ஆக குறைக்கப்பட்டது.
கட்டுமான நிறுவனங்களுக்கு கை கொடுக்கும் ஜிஎஸ்டி கவுன்சில்! - கட்டுமானத் துறை
டெல்லி: கட்டுமான நிறுவனங்களுக்கு புதிய வரி விகிதங்களுக்கு மாறும் திட்டத்திற்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இன்றைய கூட்டத்தில், மார்ச் 31ம் தேதி வரை கட்டி முடிக்கப்படாமல் உள்ள கட்டடங்களுக்கு, கட்டுமான நிறுவனங்கள் உள்ளீட்டு பலன்களை பெறலாம் அல்லது புதிய வரி வகிதத்திற்கு மாறிக்கொள்ளலாம் என ஜிஎஸ்டி கவுன்சில் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே வாங்கிய கட்டுமானப் பொருட்கள் மீதான வரிகளை திரும்ப பெறவதே உள்ளீட்டுப் பலன் என்று அழைக்கப்படுறது. ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த நடவடிக்கை நலிவடைந்துள்ள கட்டுமானத்துறையை எழுச்சி பெற செய்யும் என்று கூறப்படுகிறது.
தேர்தல் நடைபெறுவதால் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் குறித்த தற்போது கூற முடியாது என்று கூறிய அருண் ஜேட்லி, தேவை ஏற்பட்டால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.