டெல்லி: சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முயற்சியாக நரேந்திர மோடி அரசாங்கம் 3 யூனியன் பிரதேசங்கள் மற்றும் 16 மாநிலங்களுக்கு 6 ஆயிரம் கோடியை சிறப்பு கடன் திட்டத்தின் கீழ் 6 ஆயிரம் கோடியை விடுவித்துள்ளது.
இது குறித்து நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சரக்கு, சேவை வரி சிறப்பு கடன் திட்டத்தின் கீழ் 16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களுக்கு 6 ஆயிரம் கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநிலங்கள், ஆந்திரா, அசாம், பிகார், கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேகாலயா, ஒடிசா, தமிழ்நாடு, திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் யூனியன் பிரதேசமான தலைநகர் டெல்லி, ஜம்மு காஷ்மீர் மற்றும் புதுச்சேரி ஆகியவை ஆகும்.
இது வரை மத்திய அரசு 12 ஆயிரம் கோடி சிறப்பு கடன் திட்டத்தின் கீழ் விடுவித்துள்ளது. முன்னதாக அக்.23ஆம் தேதி 5.19 சதவீதம் வட்டி நிர்ணயித்து இரண்டு யூனியன் பிரதேசங்கள் மற்றும் 16 மாநிலங்களுக்கு சிறப்பு கடன் திட்டத்தின் கீழ் 6 ஆயிரம் கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) ஜிஎஸ்டி வருவாய் இழப்பை சரிகட்டும் வகையில் நிதியமைச்சகம் இத்திட்டத்தை முன்மொழிந்தது. தற்போதுவரை மொத்த வருமான பற்றாக்குறை 2.35 லட்சம் கோடியாக உள்ளது. இதில் சரக்கு, சேவை வரி வருவாய் பற்றாக்குறை 1.1 லட்சம் கோடியாக உள்ளது.
இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு உள்பட 16 மாநிலங்களுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் கடன் திங்கள்கிழமை (நவ.2) விடுவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கடன் பெற்று ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க வேண்டும் - பொருளாதார வல்லுநர்கள்