தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 15, 2019, 11:19 PM IST

ETV Bharat / business

'வைப்புத் தொகைகளுக்கான காப்பீடு இழப்பீட்டுத் தொகை உயர்த்தப்படும்' - நிர்மலா சீதாராமன்

டெல்லி: வங்கி வைப்புத் தொகைகளுக்கான காப்பீடு இழப்பீட்டுத்தொகை உச்ச வரம்பை ஒரு லட்சத்திலிருந்து உயர்த்த, பரிசீலித்து வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Nirmala

வங்கி வாடிக்கையாளர்களுக்குப் பயனளிக்கும் வகையில் வங்கியில் வைப்புத்தொகை கணக்குகளுக்கான காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அன்மையில் மகாராஷ்டிரா மாநிலத்தில், பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி முடக்கப்பட்டதையடுத்து வாடிக்கையாளர்கள் தங்கள் வைப்புத்தொகையை எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். ரிசர்வ் வங்கி விதித்துள்ள தடை காரணமாக சில ஆயிரம் ரூபாய் பணம் மட்டுமே எடுக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த சிக்கலைப் போக்கும் வகையில், வங்கி வைப்புத் தொகைகளுக்கான காப்பீடு இழப்பீட்டுத்தொகை உச்ச வரம்பை தற்போதைய ஒரு லட்சத்திலிருந்து உயர்த்த திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கான சட்டத்திருத்தத்தை வரும் திங்கட்கிழமை தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடாஃபோன் நிறுவனங்களில் ஏற்படும் நிதி சிக்கல்களைத் தீர்க்கவும் மத்திய அரசு முனைப்புக் காட்டிவருவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கோல்ஃப்: வித்தை காட்டிய ஸ்பெயின் வீரர்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details