தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

'நிபந்தனைகளுடன் முகக் கவசம், மருத்துவக் கண்ணாடிகளை ஏற்றுமதி செய்யலாம்' - மத்திய அரசு - tamil business news

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம், மாதந்தோறும் 4 கோடி இரண்டடுக்கு, மூன்றடுக்கு அறுவை சிகிச்சை முகக் கவசங்களையும், 20 லட்சம் மருத்துவ கண்ணாடிகளையும் ஏற்றுமதி செய்ய அனுமதியளித்துள்ளது.

exports of surgical masks
exports of surgical masks

By

Published : Jul 29, 2020, 5:50 PM IST

ஹைதராபாத்:மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் போது அணியும் முகக் கவசம், மருத்துவத் துறையில் பயன்படும் மூக்குக் கண்ணாடி ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய விதிகளைத் தளர்த்தியுள்ளது, மத்திய அரசு.

கரோனா நோய்த் தாக்கத்தினால் இந்த பொருட்களுக்குத் தேவை அதிகரித்துவரும் சூழலில், இவற்றை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது. ஏற்கெனவே கரோனா காலத்தில் காக்கப் பயன்படும் என் 95 முகக்கவசம், கிருமி நாசினிகள் போன்றவற்றை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கியது மத்திய அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று சர்வதேச புலிகள் தினம்: வன விலங்குகளை காப்பதற்கான முயற்சிகள் எடுப்போம்!

இத்தருணத்தில் அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் அணியும் முகக்கவசம், மூக்குக்கண்ணாடி போன்றவற்றை சில விதிமுறைகளுக்கு உள்பட்டு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது விதிமுறை தளர்த்தப்பட்டுள்ள முகக்கவசம் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் முதல் தடவை அறிவிக்கப்பட்ட ஊரடங்கின்போது தடை செய்யப்பட்டிருந்தது.

இந்தப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் முன், மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தில் ஏற்றுமதியாளர் அனுமதி பெற வேண்டும். ஆனால், இப்போது அந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது.

மாரிதாஸுக்கு வாய்ப்பூட்டு போட்ட உயர் நீதிமன்றம்!

இதுகுறித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பில், 'இரண்டு மற்றும் மூன்றடுக்கு அறுவை சிகிச்சை முகக் கவசம், மருத்துவத் துறையில் பயன்படும் மூக்குக் கண்ணாடி போன்றவற்றை ஏற்றுமதி செய்ய தடைவிதிக்கப்பட்ட நிலையில், அந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது. மாதத்துக்கு 4 கோடி முகக்கவசங்கள், 20 லட்சம் மருத்துவக் கண்ணாடி, ஃபேஸ் ஷீல்டுகளை (face Shield) ஏற்றுமதியாளர் ஏற்றுமதி செய்யலாம்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details