தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

2021இல் உலகப் பொருளாதாரம் 4% உயரும் - உலக வங்கி கணிப்பு

கோவிட்-19 தடுப்பூசி பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில் 2021இல் உலகப் பொருளாதாரம் 4% உயரும் என உலக வங்கி கணித்துள்ளது.

World Bank
World Bank

By

Published : Jan 6, 2021, 5:22 PM IST

கோவிட்-19க்குப் பிந்தைய பொருளாதார நிலவரம் குறித்து உலக வங்கி ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. உலகளாவிய பொருளாதார நிலை என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்தியாவில் கோவிட் தாக்கம் காரணமாக நடப்பு நிதியாண்டில் பொருளாதாரம் 9.6 விழுக்காடு வீழ்ச்சியைச் சந்திக்கும். குறிப்பாக இந்தியாவில் தனியார் முதலீடு, செலவினங்கள் கடுமையாகச் சரிவடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தெற்காசிய பிராந்தியம் 2021ஆம் ஆண்டில் 3.3 விழுக்காடு வளர்ச்சியைச் சந்திக்கும் எனவும், தடுப்பூசி செயல்பாடுகள் வேகமெடுக்கும் நிலையில் இந்தச் சூழல் மேலும் சாதகமாகும் எனக் கூறப்பட்டுள்ளது. வங்கதேசம், பூட்டான், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வங்கி நிதி நெருக்கடியை முறையாக கையாளாவிட்டால் பெரும் பின்னடைவைச் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

உலகப் பொருளாதாரம் வரும் ஆண்டில் 4 விழுக்காடு உயர்வைச் சந்திக்கும் எனவும் சூழலை மேம்படுத்த கொள்கைகளை வடிவமைப்பவர்கள் முறையான திட்டங்களை வகுக்க வேண்டும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:பத்து நாட்கள் தொடர் உயர்வுக்கு பின் சரிவை கண்ட பங்குச்சந்தைகள்

ABOUT THE AUTHOR

...view details