மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதாரத்தைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து, வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் மீதான அதிக வரிகளைத் திரும்பப் பெறும் என்றும், நீண்ட கால மற்றும் குறுகிய கால மூலதன ஆதாயங்களுக்கான கூடுதல் கட்டணத்தைத் திரும்பப் பெறுவதாகவும் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
ரூ. 3,800 கோடிக்கு மேல் முதலீட்டைப் பெற்ற இந்திய வர்த்தகச் சந்தை! - business news
உள்நாட்டுத் தேவைகளைப் புதுப்பிக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால், அக்டோபர் மாதத்தில் மட்டும் வெளிநாட்டு மூலதன முதலீட்டாளர்கள் (எஃப்.பி.ஐ) 3,800 கோடி ரூபாய்க்கும் மேல் இந்திய மூலதன சந்தைகள் முதலீட்டைப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், வெளிநாட்டு மூலதன முதலீட்டாளர்கள் 3,769.56 கோடி ரூபாயும், கடன் பிரிவில் 58.4 கோடி ரூபாயும் முதலீடு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் இதுவரை மொத்த நிகர முதலீடு 3,827.9 கோடி ரூபாயாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மேற்கொண்ட வரிச் சலுகை நடவடிக்கைகளால், கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கான நிகர முதலீட்டுத் தொகையைக் கணக்கிடுகையில், தற்போது வெளிநாட்டு மூலதன முதலீட்டாளர்களின் முதலீட்டுத் திறன் வளர்ச்சி கண்டுள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.