வேளாண் பொருட்களை நாடு முழுவதும் நல்ல விலைக்கு விற்க விரைவில் புதிய சட்டம் இயற்றப்படும். மாநிலங்களுக்கிடையே விளை பொருட்களை தடையின்றி கொண்டுச் செல்ல சட்டம் இயற்றப்படும். இந்த புதிய சட்டம், சீர்திருத்தங்கள் விரைவில் செயல்படுத்தப்படும். விவசாயிகளின் வருமானத்தை உத்தரவாதம் செய்யும் வகையில் மத்திய அரசு செயல்படும்.
உடனுக்குடன்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள் - பொருளாதார அறிவிப்புகள் நிர்மலா சீதாராமன்
Finance Minister Nirmala Sitharaman on Friday will announce the 3rd tranche of economic package at 4 PM.
16:56 May 15
16:43 May 15
மூலிகை பயிரிடுவதை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு நிதி ஒதுக்கீடு. ஆப்பரேஷன் பசுமைத் திட்டத்திற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு. விவசாய உற்பத்தி பொருட்களை குளிர்சாதன கிடங்கில் பதப்படுத்த 50 விழுக்காடு மானியம்.
16:32 May 15
கால்நடை தடுப்பூசியை 100 விழுக்காடு செயல்படுத்த தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்திற்கு ரூ.13,343 கோடி ஒதுக்கீடு. இதன் மூலம் நாட்டில் உள்ள அனைத்து கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும். கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 15,000 கோடி ஒதுக்கீடு.
16:32 May 15
மீனவர்கள் நலனுக்காக மீன்வளத்துறைக்கு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. அதன்படி கடல் மீன்பிடிப்பு, உள்ளூர் மீன்பிடிப்பு, மீன் பண்ணைகள் மேம்பாட்டிற்கு ரூ.11,000 கோடியும், மீன்பிடி துறைமுகம், மீன் பதப்படுத்தல் உள்ளிட்டவற்றுக்கு ரூ.9,000 கோடியும் ஒதுக்கீடு. இதன் மூலம் 55 வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
16:24 May 15
உணவு உற்பத்தி செய்யும் சிறு நிறுவனங்கள் மேம்பாட்டுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு. இதன் மூலம் சுமார் 2 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும். குறிப்பாக இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் மரவள்ளிக் கிழங்கு சர்வதேச அளவில் சந்தைப்படுத்தப்படும்.
16:22 May 15
விவசாயக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு. அறுவடைக்கு பிந்தைய காலத்தின் கட்டமைப்புகளை மேம்படுத்த இந்த நிதி பயன்படும்.
16:20 May 15
இறால் பண்ணை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் தொடரும். இறால் இறக்குமதிக்கான அனுமதி மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பு.
16:20 May 15
ஊரடங்கு காலத்தில் இதுவரை ரூ.4,100 கோடிக்கு பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் பாலின் தேவை 20 முதல் 25 விழுக்காடு சரிவைச் சந்தித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் 560 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
16:13 May 15
பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் 6,400 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் ரூ.74,300 கோடிக்கு விவசாயப் பொருட்களை அரசு கொள்முதல் செய்துள்ளது. பிரதமர் கிசான் நிதியிலிருந்து ரூ.18,700 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
16:09 May 15
இன்று வேளாண்துறை தொடர்பான 11 முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றன. இதன்மூலம், வேளாண்துறையின் அடிப்படை கட்டமைப்புகள் பலப்படுத்தப்படவுள்ளன. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு 8 திட்டங்கள், நிர்வாக கட்டமைப்புகளுக்கு 3 திட்டங்கள்.
15:32 May 15
டெல்லி: மத்திய அரசு அறிவித்துள்ள கரோனா சிறப்பு நிதிச் சலுகை குறித்த விரிவான அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மூன்றாவது நாளாக தற்போது வெளியிட்டுவருகிறார். முதல் நாள் அறிவிப்பின்போது சிறுகுறு தொழில்துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில் இரண்டாம் நாளன்று வேளாண்துறை, தொழிலாளர் நலன் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
மூன்றாம் நாளான இன்று அடுத்தகட்ட அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையடுத்து விவசாயம், பால் வளம், மீன்வளம் குறித்த அறிவிப்புகளை வெளியிடுகிறார்.