கரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார முடக்கத்தைச் சமாளிக்க 20 லட்சம் கோடி ரூபாய் சிறப்புப் பொருளதார சலுகையை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதன் விரிவான விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த இரு நாள்களாகத் தொடர்ச்சியாக வெளியிட்டுவருகிறார்.
அதன்படி முதல் நாள் அறிவிப்பில் சிறு, குறு வணிகர்கள் பயன்பெறும் வகையில், வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்குக் கடன் வழங்க பிரத்யேக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சிறு, குறு நிறுவனங்களின் உச்ச வரம்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் நாள் அறிவிப்பில், விவசாயிகளுக்கான கடன் தொகை உயர்த்தி வழங்கப்படுவதாகவும், குடிபெயர்ந்த தொழிலாளர்களைப் பாதிப்பிலிருந்து காக்க அடுத்த இரு மாதங்களுக்கு இலவச அரிசி, கோதுமை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதற்காக 1.7 லட்சம் ரூபாய் கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.