2021-22ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல்செய்யப்படுகிறது. காலை 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்து உரையாற்றுகிறார்.
அதற்கு முன்னதாக காலை நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்த நிர்மலா சீதாராமன் சிவப்பு நிற 'பட்ஜெட் பை'யுடன் செய்தியாளர்கள் முன் தோன்றினார். அவருடன் மத்திய நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் உடனிருந்தார்.
அதன்பின்னர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த நிர்மலா சீதாராமன், அமைச்சரவைக் கூட்டத்திலும் கலந்துகொண்டார். பட்ஜெட் கோப்புகள் சூட்கேஸில் கொண்டுவருவது வழக்கமாக இருந்தது. அதை மாற்றி இந்தியப் பண்பாட்டைக் குறிக்கும்விதமாக பையில் கொண்டுவரும் வழக்கத்தைச் சென்ற ஆண்டிலிருந்து தொடங்கிவைத்தார் நிர்மலா சீதாராமன்.
இதையும் படிங்க:'ரூ.1.20 லட்சம் கோடி' - பட்ஜெட்டுக்கு முன் உச்சம் தொட்ட ஜிஎஸ்டி வசூல்