நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையை சந்தித்துவருவதால், அதை மீட்டெடுக்கும் விதமாக அரசு செலவீனங்களை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. அதன்படி, நாட்டின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்தை நடத்தினார்.
மின்சாரம், கணிமம், அனுசக்தி உள்ளிட்ட 10 பொதுத்துறை நிறுவனத்தைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.
அப்போது அவர், நாட்டின் பொருளாதர வளர்ச்சிக்கு அரசு செலவீனம் என்பது முக்கிய பங்களிப்பாகும். எனவே, நிறுவனங்கள் இந்த பாதையில் சிறப்பான பங்களிப்பை மேற்கொண்டால் கோவிட்-19 தாக்கத்திலிருந்து விரைவான மீட்சியை கானாலம் என்றார்.