ஐ.என்.எக்ஸ் முறைகேடு புகார் தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் சி.பி.ஐ காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கு தொடர்பாக டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜரான சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அவர்களின் கேள்விக்கு சிரித்த முகத்துடன் '5 சதவிகிதம்' என பஞ்ச் பதில் ஒன்றைத் தெரிவித்தார் சிதம்பரம்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதமான ஜி.டி.பி 5 சதவிகமாக தற்போது சரிந்துள்ளது. கடுமையான பொருளாதார சிக்கலை நாடு தற்போது சந்தித்துள்ள நிலையில், ஆளும் பாஜக அரசை கேலியாக விமர்சிக்கும் வகையில் 5 சதவிகிதம் என்னவென்று நினைவிருக்கிறதா எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
5 சதவிகிதம் என கலாய்க்கும் சிதம்பரம் சி.பி.ஐ காவலில் வைக்கப்பட்டு கடுமையான அழுத்தத்தை சிதம்பரம் சந்தித்துவரும் போதிலும், பாஜக அரசை புன்சிரிப்புடன் அவர் செய்தியாளர்கள் முன் கேலி செய்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.