கரோனா வைரஸ் பாதிப்பால் உலகின் பெரும்பாலான நாடுகளின் இயல்புநிலை முற்றிலுமாக முடங்கியுள்ளது. உலகின் முன்னணி பொருளாதார பெரும் சக்திகளான சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா உள்ளிட்ட ஜி-20 நாடுகள் கரோனா வைரசால் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.
இதன் விளைவாக உலகில் பொருளாதார சரிவு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. இந்நிலையில் சர்வதேச பொருளாதார தர மதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச், கரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் கடுமையான சரிவைச் சந்திக்கும் என எச்சரித்துள்ளது.
2020ஆம் நிதியாண்டில் 4.9 விழுக்காட்டிலிருந்த இந்தியப் பொருளாதாரம், 2021ஆம் நிதியாண்டில் 0.8 விழுக்காடாகக் குறையும் என ஃபிட்ச் நிறுவனம் கணித்துள்ளது.