தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஜி.எஸ்.டியில் புதிய வரியா? நிதியமைச்சகம் மறுப்பு

டெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் புதிதாக பேரிடர் வரி சேர்க்கப்படும் என்ற தகவல் உண்மையில்லை என மத்திய நிதியமைச்சகம் மறுத்துள்ளது.

GST
GST

By

Published : May 24, 2020, 3:09 PM IST

கரோனா தாக்கத்தின் காரணமாக இந்தியாவில் கடும் பொருளாதார பாதிப்பு நிலவிவரும் நிலையில், அரசின் நிதி வருவாயை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, தற்போது உள்ள சரக்கு மற்றும் சேவை வரியில் பேரிடர் வரி என்ற கூடுதல் வரி சேர்க்கப்பட்டு வசூல் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகின.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் தனது ட்விட்டர் பதிவில், "இதுபோன்ற பேரிடர் காலத்தில் புதிதாக பேரிடர் வரி என்ற மோசமான எண்ணத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு நிதியமைச்சகம் அளித்த பதில் அறிக்கையில், நாட்டின் தற்போதைய பொருளாதார சூழலை நிதியமைச்சகம் கூர்ந்து கவனித்துவருகிறது. அப்படியிருக்க, இதுபோன்ற புதிய வரி விதிக்கும் திட்டம் எதுவும் நிதியமைச்சகத்துக்கு இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

முன்னதாக, கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டபோது, 'வெள்ள வரி' என்ற கூடுதல் வரி விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:விரைவில் வருகிறது எம்ஐ நிறுவனத்தின் புதிய ஃபிட்னஸ் பேண்ட்!

ABOUT THE AUTHOR

...view details