தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

15ஆவது நிதிக்குழு அறிக்கை குடியரசுத் தலைவரிடம் ஒப்படைப்பு - 15th finance commission NK singh

டெல்லி: 2020-21ஆம் ஆண்டுக்கான 15ஆவது நிதிக்குழு அறிக்கையை நிதிக்குழுத் தலைவர் என்.கே. சிங் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்திடம் சமர்ப்பித்தார்.

15th finance commission
15th finance commission

By

Published : Dec 5, 2019, 5:32 PM IST

நாட்டின் 15ஆவது நிதிக்குழு பொருளாதார நிபுணர் என்.கே. சிங் தலைமையில் அமைக்கப்பட்டது. இக்குழுவின் செயலராக அரவிந்த் மேத்தாவும், குழுவின் உறுப்பினர்களாக அஜய் நாராயண் ஜா, அசோக் லஹிரி, ரமேஷ் சந்த், அனூப் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

2020-21ஆம் ஆண்டுக்கான நாட்டின் நிதிக்கொள்கை குறித்து வரைவைத் தயார் செய்த இக்குழு, அதன் அறிக்கையை நிதிக்குழுத் தலைவர் என்.கே. சிங் மூலம் தொகுப்பாக குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்துள்ளது.

15ஆவது நிதிக்குழுவானது இந்திய அரசியல் சாசன சட்டப்பிரிவு 280இன் கீழ் குடியரசுத் தலைவரால், 2017ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி நிறுவப்பட்டது. இக்குழு 1ஆவது ஏப்ரல் 2020ஆம் ஆண்டு தொடங்கி 31ஆவது மார்ச் 2025ஆம் ஆண்டு வரை, நாட்டின் நிதிக்கொள்கை குறித்த வரைவைத் தயார் செய்யவுள்ளது. அதன் முதற்கட்ட அறிக்கையானது குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் இந்த அறிக்கை அமல்படுத்தப்படும்.

இதையும் படிங்க: ரன் கோயல் ரன்; கலாய் வாங்கிய ரயில்வே துறை அமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details