எஸ்பிஐ வங்கி சார்பில், 'யோனோ 20 அண்டர் 20' என்ற பெயரில் அறிவியல், கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 20 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அந்த வங்கியின் தலைவர் ராஜ்னீஸ் குமார், எஸ்பிஐ சார்பில் வழங்கப்படும் 59 நிமிடக் கடனில், தினமும் 50 கடன் கோரிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் 5 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களின் தகவல்கள் பாதுகாப்பற்ற சர்வர்கள் மூலம் கசிந்துள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில், அதற்கு ராஜ்னீஸ் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்களின் தகவல்கள் பாதுகாப்பாகவே உள்ளது என அவர் உறுதியளித்துள்ளார்.