தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஏப்ரல்-நவம்பர் காலகட்டத்தில் ஏற்றுமதி 17.84 விழுக்காடு சரிவு - நாட்டின் வர்த்தக நிலவரம்

ஏப்ரல்-நவம்பர் மாத காலகட்டத்தில் நாட்டின் ஏற்றுமதி 17.84 விழுக்காடு சரிவைச் சந்தித்துள்ளதாக வர்த்தகத் துறைச் செயலர் அனுப் வதாவன் தெரிவித்துள்ளார்.

Exports
Exports

By

Published : Dec 2, 2020, 7:08 PM IST

நாட்டின் வர்த்தக நிலவரம் குறித்து வர்த்தகத் துறைச் செயலர் அனுப் வதாவன் ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், நாட்டின் வர்த்தக நடவடிக்கைகள் ஏப்ரல்-நவம்பர் மாத காலத்தில் சுணக்கம் கண்டதாகவும், இந்தக் காலகட்டத்தில் நாட்டின் ஏற்றுமதி 17.84 விழுக்காடு சரிவைச் சந்தித்தாகத் தெரிவித்தார். அதேபோல், இறக்குமதியும் 33.56 விழுக்காடு சரிந்துள்ளதாகவும் கூறினார்.

அதேவேளை மருந்து வர்த்தகம் ஏற்றுமதி 15 விழுக்காடு உயர்வைக் கண்டதாகத் தெரிவித்த அவர், நெல், இருப்பு ஏற்றுமதியும் நல்ல உயர்வைக் கண்டதாகக் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், 2025ஆம் ஆண்டில் நாட்டின் வர்த்தக இலக்கான ஒரு லட்சம் கோடி ரூபாய் எட்டப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும், நாட்டின் தொழில் துறை மேம்பாட்டிற்காக 10 முக்கியத் துறைகள் கண்டறியப்பட்டு அதன்மூலம் ரூ.20 லட்சம் கோடி வருவாய் ஈட்ட அரசு நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் கூறினார்.

இதையும் படிங்க:பாரத் பெட்ரோலியத்தை ஏலம் எடுக்க 3 நிறுவனங்கள் தயார்: தர்மேந்திர பிரதான்

ABOUT THE AUTHOR

...view details