டெல்லி:இஎஸ்ஐ திட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் வேலையில்லாமல் இருக்கும்போது, அவர்களுக்கு அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா திட்டத்தின் மூலம் நிவாரணத் தொகை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், 40 லட்சம் வேலையற்ற தொழிலாளர்கள் மூன்று மாத ஊதியத்தில் 50 விழுக்காடு பெறும்வகையில், ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகத்தின் (Employees’ State Insurance Corporation -ESIC) விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு மார்ச் 24 முதல் டிசம்பர் 31 வரை தொற்றுநோயால் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு நிவாரணமாக மூன்று மாத சராசரி ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC) தங்கள் விதிமுறைகளை தளர்த்தியுள்ளது.
இந்த நடவடிக்கை பல துறைகளில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு பயனளிக்கும். முன்னதாக, அடல் பிமித் வியக்கி கல்யாண் யோஜனா, வேலையின்மை சலுகைகளை செலுத்துவதை உறுதி செய்வதற்கான தகுதி மற்றும் மேம்பாடுகளில் தளர்த்தலுக்கு ஒப்புதல் அளித்தது.
மேலும், இந்தத் திட்டத்தை அடுத்த ஆண்டு ஜூன் 1ஆம் தேதி வரை நீட்டிக்கவும் இ.எஸ்.ஐ.சி. (ESIC) முடிவு செய்துள்ளது.
அதன்படி, நிவாரணம் செலுத்துதல் சராசரி ஊதியத்தில் 50 விழுக்காடு ஆக உயர்த்தப்பட்டுள்ளது, இது சராசரி ஊதியத்தில் 25 விழுக்காட்டிலிருந்து அதிகபட்சம் 90 நாள்கள் வேலையின்மை வரை செலுத்தப்பட உள்ளது.
தளர்த்தப்பட்ட நிபந்தனைகளின்படி, அதிகரிக்கப்பட்டுள்ள நிவாரணத்தொகை 24.03.2020-லிருந்து 31.12.2020 வரையிலான காலத்திற்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ESI திட்டம்: மகப்பேறு உதவித்தொகையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு!