கரோனா பரவல் காரணமாக சர்வதேச பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சரிவில் இருந்த இந்திய பொருளாதாரம், கரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, எஃகு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள உற்பத்தி வீழ்ச்சியால் எட்டு முக்கிய தொழிற்துறையின் உற்பத்தி ஜூன் மாதத்தில் 15 விழுக்காடு வரை குறைந்துள்ளது.
இந்த எட்டு முக்கிய துறைகள், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 1.2 விழுக்காடு வரை அதிகரித்திருந்ததாக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உரம் தயாரிக்கும் துறையை தவிர, நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், எஃகு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய ஏழு முக்கிய துறைகள் மே மாதத்தில் எதிர்மறையான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.